இளங்கோபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன

0
597
tamilnews old bombs weapons coughed police stf dismantled

(tamilnews old bombs weapons coughed police stf dismantled)

முல்லைத்தீவு விசுவமடு, இளங்கோபுரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் ஒருதொகுதி வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து அந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தவிடயம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் சிறப்பு அதிரடிப்படையினருக்கு அறிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தி நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அவற்றை மீட்டு அழிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்கள்.

நேற்று குறித்த இடத்திற்கு சென்ற கிளிநொச்சியினை சேர்ந்த சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த வெடிபொருட்களை மீட்டு காட்டுப்பகுதியில் வைத்து அழித்துள்ளார்கள்.

இதன்போது, 737 மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள், கனரக துப்பாக்கி ரவைகள் மற்றும் ஆர்.பி.ஜி, துப்பாக்கி செலுத்திகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

(tamilnews old bombs weapons coughed police stf dismantled)

More Tamil News

Tamil News Group websites :