ஐரோப்பிய லீக் அரையிறுதியில் அர்செனல் தோல்வி!

0
786
atletico madrid vs Arsenal Europa League news Tamil

(atletico madrid vs Arsenal Europa League news Tamil)

ஐரோப்பிய லீக் உதைப்பந்தாட்ட தொடரின் அரையிறுதியில் அர்செனல் அணி தோல்வியை சந்தித்துள்ளது.

இன்று அதிகாலை நடைபெற்ற அரையிறுதியின் இரண்டாவது லீக் போட்டியில் அர்செனல் அணி, அட்லாண்டிகோ மெட்ரிட் அணியை எதிர்கொண்டது.

அரையிறுதியின் முதல் லீக் போட்டியில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை அடிக்க 1-1 என போட்டி முடிவடைந்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் கோலடிக்கும் அணி அரையிறுதியின் வெற்றியை தனதாக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் இருந்தது.

இதன்படி இன்று நடைபெற்ற போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது. இரு அணிகளும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை தவறவிட போட்டி கோல்கள் இல்லாமல் நகர்ந்தது.

எனினும் முதற்பாதியில் வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் (45+2) அட்லாண்டிகோ அணியின் டியாகோ கோஸ்டா கோலடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.

தொடர்ந்த இரண்டாவது பாதியிலும் அர்செனல் அணி கோலடிக்கத் தவறிய நிலையில், அட்லாண்டிகோ அணி 2-1 என்ற மொத்த கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

<<Tamil News Group websites>>