மிருக இனம் கொண்டவர்கள் மஹிந்தவும் நாமலும் ; சரத் பொன்சேகா பதிலடி

0
6549
tamil news namal said mahinda only fire under world gangs

(Animal species Mahinda Rajapaksa, Namal Rajapaksa)
நாட்டை ஆட்சிசெய்த அரச தலைவர்கள், முன்னாள் இராணுவத் தளபதியான தன்னை மிருகத்துடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள் என்றால் அந்த ஆட்சியாளரும் அவருடைய மகனும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் எனப் புலப்படுவதாக அமைச்சர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி என்றுகூட பார்க்காமல் மிருகத்துடன் தொடர்புபடுத்தி தன்னை விமர்சித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது புதல்வாரன நாமல் ராஜபக்ச மீது கடும் கண்டனத்தை சரத் பொன்சேகா வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றத்தின் போது பிராந்திய அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமனம் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர் சரத் பொன்சேகா,

மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, விமல் வீரவன்ச ஆகியோர் தன்னை மிருகங்களுடன் ஒப்பிட்டு கூறிய விடயங்கள் பத்திரிகையில் வெளிவந்ததாகவும் கூறியுள்ளார்.

அவர்களுக்கு மனிதர்களுடய சிந்தனையா அல்லது மிருகங்களுடைய சிந்தனையா இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜாதகத்தை பார்த்து அமைச்சுப் பதவிகள் பகிரப்பட்டுள்ளதாக விமல் வீரவன்ச கூறியதாகவும் அவ்வாறானால் அவருக்கு நரி அமைச்சையே வழங்கியிருக்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

சட்டம், ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்ஷல் பொன்சேகா நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும், இறுதியில் ஏற்கனவே வகித்த பிராந்திய அபிவிருத்தி அமைச்சுடன் சேர்த்து வனஜீவராசிகள் அமைச்சும் அவருக்கு வழங்கப்பட்டது.

இதனை சுட்டிக்காட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், அவரது புதல்வாரன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கிண்டலாக விமர்சனங்களை வெளியிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Animal species Mahinda Rajapaksa, Namal Rajapaksa