(Enga Veedu Mappilai Contestant Susana Son Needan Wish)
எங்கள் வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியில் பங்குபற்றி ஆர்யாவை மணம் முடிக்க கனடாவில் இருந்து வந்த இலங்கைப்பெண் சூசனா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகாரத்தானவர். இவருக்கு ஆறு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
ஆர்யா போட்டியாளர்களின் வீட்டுக்கு சென்று அவர்களின் குடும்பங்களை சந்தித்து பேசியிருந்தார். அதே போல சுசானாவின் சொந்த நாடான இலங்கைக்கும் அவர் வந்திருந்தார்.
இதனிடையே, அவர் சந்திக்க ஆவலுடன் இருந்த சுசானாவின் பையனை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருந்தது. அப்போது சுசானாவின் மகன் நீடனுடன் சந்தோசமாக பேசி அவனை பார்க், காபி ஷாப், மால் என்று அவனை சந்தோசப்படுத்தினார்.
அப்போது ஆர்யாவிடம் பேசுகையில் ‘நான் விஜய் மாமாவை பாக்க வேணும்’ என்று தனது ஆசையை ஆர்யாவிடம் தெரிவித்துள்ளான். இதை கேட்ட ஆர்யா, அவனின் ஆசையை வெகுசீக்கிரம் நிவர்த்தி செய்வதாக கூறினார்.