(Chekka Chivantha Vaanam team accused Kovalam Beach)
”செக்கச் சிவந்த வானம்” குழு, கோவளம் கடற்கரையில் படப்பிடிப்பு நடத்திய போது, கண்ணாடித் துண்டுகள் உள்ளிட்ட கூர்மையான பொருட்களை போட்டுவிட்டுச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது.. :-
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ”செச்கச் சிவந்த வானம்”.
கடந்த வாரம் படப்பிடிப்பு கோவளம் கடற்கரையில் நடந்துள்ளது. விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை அங்கு படமாக்கியுள்ளனர்.
கோவளம் கடற்கரையில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி படக்குழு அங்கிருந்து கிளம்பியுள்ளது. மறுநாள் காலை கடற்கரைக்கு வந்த மக்கள் அங்கு கிடந்த கண்ணாடித் துண்டுகள், கூர்மையான பொருட்கள் என்று குவிந்து கிடந்த குப்பையால் அதிர்ச்சி அடைந்தனர்.
கடற்கரையில் கிடந்த கண்ணாடி துண்டுகளை தன்னார்வலர்கள் சுத்தம் செய்துள்ளனர். அப்போது மூன்று பேரின் கையில் கண்ணாடி துண்டுகள் குத்தி காயம் ஏற்பட்டுள்ளது.
கடற்கரையை சுத்தம் செய்யுமாறு படத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸிடம் கூறியபோது, ”ஆட்களை அனுப்புகிறோம் என்றார்களே தவிர திகதி குறிப்பிடவில்லை” என்று அப்பகுதியை சுத்தம் செய்த வழக்கறிஞர் சவுகத் ஜமால் தெரிவித்துள்ளார்.
மேலும், ”படக்குழு போட்டுச் சென்ற குப்பையை பிறர் சுத்தம் செய்வது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக ஏ.ஆர். முருகதாஸின் படக்குழு பிளாஸ்டிக் உள்ளிட்ட செட் பொருட்களை போட்டுச் சென்றது. மரக் கப்பலின் ஒரு பகுதியை படக்குழு விட்டுச் சென்றது. அதை நாங்கள் தான் அப்புறப்படுத்தினோம்” என்கிறார் சவுகத்.
ஆனால், ”நாங்கள் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் அங்கிருந்து கிளம்பும் முன்பு அந்த இடத்தை சுத்தம் செய்து விடுவோம். கோவளம் கடற்கரையையும் சுத்தம் செய்துவிட்டு தான் வந்தோம். எங்கள் குழுவை சேர்ந்த 20 பேர் சுத்தம் செய்தனர். கண்ணாடித் துண்டுகள் கிடந்ததற்கு நாங்கள் பொறுப்பு அல்ல.”
இவ்வாறு மெட்ராஸ் டாக்கீஸின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளர் சிவா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கஜினிகாந்த் பட ட்ரெய்லர்..!
* கணவரால் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை : விவாகரத்துக்கு ரெடி..!
* செல்லக்குட்டி ஓவியாவின் சம்பளம் இவ்வளவா..? : வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..!
* சோனம் கபூருக்கு விரைவில் டும்..டும்..டும்..!
* காலா படத்தின் ‘செம வெயிட்டு…’ சிங்கிள் பாடல் வெளியீடு..!
* ப்ரியங்கா சோப்ராவின் ரகசிய திருமணம் : பாலிவுட்டில் பரபரப்பு..!
* டுவின்ஸ் சகோதரிகளுக்கு தங்கையாகிய ஜோதிகா : லேட்டஸ்ட் அப்டேட்..!
* வீடு இன்றி பாலத்தின் அடியில் வசிக்கும் ஜாக்கிசான் மகள் : பகீர் தகவல்..!
Tags :-Chekka Chivantha Vaanam team accused Kovalam Beach
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-