குழந்தைகள் விரும்பி உண்ணும் வாழைப்பழ அப்பம்

0
870
Kids Favourite Tasty Banana Hoppers Recipe, Kids Favourite Tasty Banana Hoppers, Kids Favourite Tasty Banana, Kids Favourite Tasty, Kids Favourite
Photo Credits: Tamilnews-Samayam

(Kids Favourite Tasty Banana Hoppers Recipe)
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு – அரை கப்
* அரிசி மாவு – 2 கப்
* கனிந்த பூவன்பழம்- 2
* வெல்லம் – 2 கப்
* தேங்காய் விழுது – 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன்
* நெய் – அரைகப்
* நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
* ஆப்ப சோடா – 2 சிட்டிகை

 

செய்முறை :
* கோதுமை மாவு மற்றும் அரிசி மாவினை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

* பூவன்பழத்தை துண்டுகளாக்கி, மிக்சியில் நன்றாக அரைத்து மாவுடன் சேர்க்க வேண்டும்.

* தேங்காய் விழுதை சிறிதளவு நெய்யில் நன்றாக சிவக்கும் வரை வறுத்து மாவுடன் சேர்க்க வேண்டும்.

* வெல்லத்துடன் அரை கப் தண்ணீரை ஊற்றி,அடுப்பில் வைத்து, வெல்லம் தண்ணீரில் கரைந்து கொதித்ததும் வடிகட்ட வேண்டும்.

* வெல்லம் சூடாக இருக்கும் போதே மாவில் ஊற்ற வேண்டும்.

* பின்னர் மாவுடன் ஆப்ப சோடா மற்றும் ஏலக்காய்தூள் ஆகியவற்றை சேர்த்து இட்லி மாவு போன்ற பதம் வரும் வரை நன்கு கரைக்க வேண்டும்.

* குழிப்பணியாரக் கல்லில் பணியாரம் ஊற்றுவது போல, மாவை ஊற்றி வேக விட வேண்டும்.

* மொறுமொறுப்பாக இருக்க கல்லில் எண்ணெய், நெய் சிறிது அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

* மாவு ஒருபுறம் நன்றாக வெந்ததும், திருப்பிவிட்டு எடுத்து பறிமாறலாம்.

* வித்தியாசமான சுவையுடன் இருக்கும் வாழைப்பழ அப்பம், மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது மட்டுமல்லாது உடலுக்கும் பல நன்மைகள் செய்யக்கூடியது.

 

Source : Tamilnews- Samayam

web title :Kids Favourite Tasty Banana Hoppers Recipe