{ keviyas resign mipipi party }
மலேசியா, கடந்த ஏப்ரல் 23ஆம் திகதியிடப்பட்டு, மைபிபிபி தேசியத்தலைவர் பதவியிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக விடுத்த கடிதத்தை தாம் மீட்டுக் கொள்வதாக டான்ஶ்ரீ கேவியஸ் நேற்று தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியின் தலைமையகத்திற்கு வெளியே குறிப்பிட்ட சில உறுப்பினர்களை மட்டும் கொண்டு நடத்தப்பட்ட சட்ட விரோத கூட்டமானது கட்சியின் அமைப்பு விதிகளுக்கு முரணானது என்றும் அவர் கூறியுள்ளார்.
‘எனது பதவி விலகல் கடிதம் முறையாக, சட்டப்பூர்வமாக கூட்டப்பட்ட உச்சமன்ற கூட்டத்தின் முன் வைக்கப்படாமல் போனதால் அதனை மீட்டுக் கொள்கின்றேன் என்று அவர் கூறியிருக்கின்றார்.
மூத்த உதவித் தலைவர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கிடையேயான சதித் திட்டத்தின் வழி கட்சியை கைப்பற்றும் முயற்சி நடந்திருப்பதைத் தொடர்ந்து கட்சிக்குள் ஒற்றுமையையும் அமைதியையும் கொண்டுவர கட்சியின் அமைப்பு விதியான 9.9.1-இன் அடிப்படையில் தாம் மீண்டும் சட்டப்பூர்வ தேசியத் தலைவர் என்ற முறையில் பொறுப்பையும் கடமையையும் ஏற்றுக் கொள்வதாக டான்ஶ்ரீ கேவியஸ் கூறியுள்ளார்.
எனவே, விசுவாசம் மிக்க அனைத்து உறுப்பினர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். கட்சி அமைப்பு விதியான 31.3.1-க்கு ஏற்ப முறையான உச்சமன்றக் கூட்டம் கூட்டப்படும் வரையில் அமைதி காக்குமாறு வேண்டுகின்றேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.