(curd butter milk better summer)
தயிர், மோர் இரண்டுமே உடலுக்குக் குளிச்சியைத்தான் தரும். கோடைக்காலத்தில் தயிரை பயன்படுத்துவது சிறந்ததா? அல்லது மோரை பயன்படுத்துவது சிறந்ததா? என்ற சந்தேகம் அனைவருகும் இருக்கும்.
என்னதான் இரண்டும் குளிர்ச்சியை தந்தாலும், தயிரைவிட மோர் உடலில் அதிக குளிர்ச்சியை அதிக நேரத்துக்கு தக்கவைத்துக்கொள்ள உதவும்.
ஆயுர்வேத மருத்துவத்தின்படி தினமும் சாப்பிட கூடாத உணவுகளில் தயிரும் ஒன்று. தினமும் தயிர் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு, சுவாசப் பிரச்னைகள், இருமல் போன்றவை உண்டாகுமாம்.
ஆனால், தினமும் மோர் குடித்தால் அது பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவும். கால்சியம் குறைபாடு, வயிற்றில் ஏற்படும் எரிச்சல், நீரிழப்பு ஆகியவற்றை சரிசெய்யும்.
கண்டிப்பாக தினமும் தயிரை உட்கொள்ள கூடாது. உடல் குளிர்ச்சிக்காக இதை உட்கொள்வதால் எந்த பயனும் இல்லை. தயிர் சூட்டைத்தான் ஏற்படுத்தும்.
எனவே, கோடைக்காலத்தில் தயிரை விடவும், மோரை பயன்படுத்துவதே சிறந்தது.
<<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>
காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்
சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!