ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 432 சிறைக்கைதிகள் விடுதலை

0
812
presses general amnesty grant to 432 political prisoners

(presses general amnesty grant to 432 political prisoners)

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், 432 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்களில் 23 பேர், வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், மீண்டும் சிறைவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் 405 நபர்களும் 4 பெண்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறு குற்றங்கள் தொடர்பில் சிறைக்கு சென்றவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறிய தவறுகளுக்காக சிறைதண்டனை விதிக்கப்பட்ட 70 வயதுக்கு அதிகமானவர்களின் தண்டனைக்காலத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வருடத்துக்கு 7 நாட்கள் என்ற ரீதியில் இவர்களின் தண்டனை காலம் குறைக்கப்படும் எனவும் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால், நாளைய தினம் முதல் மே மாதம் முதலாம் திகதிவரை வெசாக் வலயமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

சிறைக்கைதிகளால் உருவாக்கப்பட்ட வெசாக் தோரணங்கள் இதன்போது காட்சிப்படுத்தப்படவுள்ளன.

(presses general amnesty grant to 432 political prisoners)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :