hatton dollhouse cannabis worship police recover morning
நல்லதண்ணி பகுதியில் சட்டவிரோத போதை பொரட்களுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 7 பேரிடமிருவந்து கஞ்சா பைக்கற்றுக்கள் ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் ‘கோரா’ என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.
நாட்டின் பல பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்றவர்களிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டன.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் நேற்று (27) இரவிலிருந்து இன்று (28) காலை வரை வாகனங்களை ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் சோதனை செய்தனர்.
இதன்போது 7 பேரிடமிருந்து 6900 மில்லிகிராம் கஞ்சா பக்கட்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
இதனையடுத்து குறித்த 7 பேரையும் கைது செய்த ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர், ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்
hatton dollhouse cannabis worship police recover morning
More Time Tamil News Today
- முஸ்லிம் ஆசிரியையின் சர்ச்சை; அதிரடி முடிவு
- ரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்
- களியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு
- மக்களே அவதானமாக இருங்கள்….!
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
hatton dollhouse cannabis worship police recover morning