DMK DMDK Only authorized parties
தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. மட்டுமே அங்கீகாரம் பெற்ற கட்சிகள் என இந்திய தேர்தல் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. இவை தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்தாலும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெறுவதற்கு சில விதிமுறைகளை பூர்த்தி செய்தாக வேண்டும்.
இப்படி பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி 56 தேசிய மற்றும் மாநில கட்சிகள் உட்பட மொத்தம் 1,866 கட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் காங்கிரஸ், பா.ஜ. க. உள்ளிட்ட 7 கட்சிகள் தேசிய கட்சிகளாகவும் சில கட்சிகள் மாநில கட்சிகளாகவும் அங்கீகாரம் பெற்றுள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் என 154 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளன.
இதில் அ.தி.மு.க., தி.மு.க. தே.மு.தி.க. ஆகிய 3 கட்சிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்று இருப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிட முடியாது. தேர்தல் ஆணையம ஒதுக்கும் சின்னங்களில் ஒன்றையே இந்த கட்சிகள் தேர்தலில் பயன்படுத்த முடியும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Only authorized parties