புத்தாண்டு நிகழ்வில் மானத்தை இழந்த நபர் : கண்டியில் இப்படியும் ஒரு சம்பவம்

0
1174

(marathon race Kandy new year games)
புத்தாண்டை முன்னிட்டு கண்டியில் இடம்பெற்ற விளையாட்டு போட்டிகளின் போது விபரீத சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

புத்தாண்டை முன்னிட்டு கண்டியில் பல விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதில் சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.

போட்டியின் ஒரு அங்கமாக மரதன் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போட்டியை கண்டுகளிக்க அனைவரும் ஆவலாக வீதிகளில் காத்திருந்தனர்.

போட்டி ஆரம்பித்து வீரர்கள் ஓடிக் கொண்டிருந்த போது, நாய் ஒன்று மரதன் ஓடிக் கொண்டிருந்த வீரர் ஒருவரின் பின்னால் ஓடியுள்ளது.

மிகவும் வேகமாக ஓடிக்கொண்டிருந்த குறித்த நபருக்கு பின்னால் நாய் ஒன்று ஓடுவதை அங்கிருந்த மக்கள் உற்று நோக்கியுள்ளனர்.

சிறிது நேரத்தில் நாய் குறித்த வீரரின் உடையை கவ்வி இழுத்துள்ளது.

இதனால் நபர் நிர்வாணமாக வீதியில் நின்றுள்ளார்.

பின்னர் செய்வதறியாது காட்டுக்குள் ஓடியுள்ளார்.

குறித்த நபர் வளர்த்த நாயே உரிமையாளரின் மீது இருந்த பாசத்தால் இவ்வாறு செய்துள்ளது.

இந்த சம்பவம் அங்கிருந்தவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags:marathon race Kandy new year games, marathon race Kandy new year games