ஈ.பி.டி.பி பெரிய கட்சி அல்ல; எம்.ஏ. சுமந்திரன்

0
1612
tamilnews MA Sumanthiran Violence terrible events living community

(EPDP not big party)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியதற்கான ஆதாரம் இருந்தால் அதனை ஈ.பி.டி.பி முதலில் வெளியிட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துமளவுக்கு ஈ.பி.டி.பி ஒரு பெரிய கட்சி அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் யாழ். அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க ஈ.பி.டி.பியுடன் பேச்சு நடத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஈ.பி.டி.பி அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு ஈ.பி.டி.பி என்பது பெரிய கட்சியோ, முக்கியத்துவம் வாய்ந்த கட்சியோ அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதற்கான ஆதாரங்கள் இருந்தால், அதனை வாயால் கூறிக்கொண்டிருக்காமல் வெளிப்படுத்தட்டும் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பி கட்சி குறித்து பேசி நேரத்தை வீணடிக்க தான் விரும்பவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags; EPDP not big party