ஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி

0
928
2 militant Shot Dead Jammu Kashmirs Budgam Inida Tamil News

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் அருகே தேசிய எல்லைக் கோட்டுப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற 2 ஆயுததாரிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். (2 militant Shot Dead Jammu Kashmirs Budgam Inida Tamil News)

காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டம் ஜாகூ பகுதியில் உள்ள கான்சாகீப் என்ற இடத்தில் ஆயுததாரிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை மூலம் இரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை முற்றுகையிட்டு, ஆயுததாரிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இரு தரப்பினர் இடையே பயங்கரதுப்பாக்கி சண்டை இடம்பெற்றது.

இதில் பாதுகாப்பு படையினர் சுட்டதில் 2 ஆயுததாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட அதேவேளை, இவர்களது பெயர், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஏ.கே.ரக துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்த நிலையில், மேலும் குறித்த பகுதியில் ஆயுததாரிகளின் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

காஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

என் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி

தமிழ் நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

மகிந்த ராஜபக்ச சர்வதேச குற்றவாளி; அமைச்சர் ஜெயக்குமார்

சபரிமலை கலவரத்தில் ஈடுபட்ட 3505 பேர் கைது

Tamil News Group websites

Tags; 2 militant Shot Dead Jammu Kashmirs Budgam Inida Tamil News