26 ஆப்பிரிக்க நாடுகளில் சிங்கங்கள் அதிகம் வாழ்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக அவை தொடர்ந்து அழிந்து வருகின்றன. 43 சதவீதம் சிங்கங்கள் அழிந்த நிலையில் தற்போது சர்வதேச அளவில் 20 ஆயிரம் மட்டுமே உள்ளன. 2 lions born world first time artificial fertilization
இந்த நிலையில் சிங்கத்தின் இனத்தை காப்பாற்ற விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் பிரிடோரியாவில் உள்ள பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பெண் சிங்கத்துக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்தனர்.
முன்னதாக உடல் திடகாத்திரமான ஆண் சிங்கத்தின் விந்தணுவை (உயிரணு) சேகரித்தனர். அதை தகுதி வாய்ந்த பெண் சிங்கத்தின் கருமுட்டையுடன் இணைத்து செயற்கை கருத்தரிப்பு செய்தனர். பின்னர் அதை பெண் சிங்கத்தின் கர்ப்பபைக்குள் வைத்தனர்.
அதை தொடர்ந்து 2 சிங்க குட்டிகள் பிறந்தன. அதில் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன. ஒரே மாதிரியுள்ள 2 குட்டிகளும் வன விலங்குகள் சரணாலயத்தில் ஓடியாடி விளையாடுகின்றன. இவற்றை பொதுமக்கள் கண்டு இரசிக்கின்றனர்.
இதன் மூலம் முதன் முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த சிங்க குட்டிகள் என்ற பெருமையை இவை பெற்றுள்ளன.
tags :- 2 lions born world first time artificial fertilization
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- ஜப்பானைத் தாக்கிய டிராமி புயல்: 2 பேர் பலி
- இந்தோனேசியாவில் மீண்டும் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு: 2 பேர் காயம்
- மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மேலாடையின்றி பாடிய டென்னிஸ் வீராங்கனை
- ஓரினச் சேர்க்கையாளர்களினால் சீனாவில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- இந்தோனேசியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1200 ஆக உயர்வு
- இந்தோனேசியா நிலநடுக்கம்: 384 பேர் பலி
எமது ஏனைய தளங்கள்