13 வயது சிறுவனை மணந்த இளம்பெண்; சமூக வலை தளங்களில் பரவியதால் கைது செய்யுமாறு கோரிக்கை

0
642
13 year olds 23 yearold parents Andhra engaged marrying social networks

13 year olds 23 yearold parents Andhra engaged marrying social networks

இந்திய ஆந்திரா மாநிலத்தில் 13 வயது சிறுவனுக்கும் 23 வயது இளம்பெண்ணுக்கும் பெற்றோர்களே திருமணம் நடத்திவைத்த சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இவ்வாறு திருமணம் செய்து வைத்த பெற்றோர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பலர் அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கவுதாலம் மண்டலத்துக்கு உட்பட்ட உப்பரஹால் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்கும் கர்நாடக மாநிலம் சனிக்கனூரில் வசிக்கும் இந்த சிறுவனின் உறவினரான 23 வயது பெண்ணுக்கும் கடந்த மாதம் 27ஆம் திகதி உப்பரஹால் கிராமத்தில் திருமணம் நடந்துள்ளது.

இவர்கள் இருவரும் உறவினர் என்பதால், ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் அடிக்கடி சென்று வரும்போது, அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வி‌டயம் பெற்றோர் களுக்கு தெரியவரவே, இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் அண்மையில் வெளியாகி வைரலாக பரவியதை தொடர்ந்து, 13 வயது சிறுவன் ‘மைனர்’ என்பது தெரிந்தும்இ அவனை 23 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர்களே எப்படி திருமணம் செய்து வைத்தனர் என்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி அறிந்ததும் இளம்பெண் மற்றும் சிறுவன் ஆகியோருடன் 2 பேரின் பெற்றோர்களும் தலைமறைவாகியுள்ளனர்.

இருப்பினும், மைனர் சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

13 year olds 23 yearold parents Andhra engaged marrying social networks

More Tamil News

Tamil News Group websites :