பிரான்ஸ் நாட்டிலுள்ள நோர்ட் பகுதியில் கடந்த ஏப்ரல் 25 ம் திகதி காணாமற் போன 13 வயது சிறுமி மூன்று நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.13 year child Angelique murder Paris
Wambrechies நகரில் வசிக்கும் Angelique எனும் 13 வயது சிறுமியே நண்பர்களுடன் வீட்டை விட்டு வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அன்று முழுவதும் சிறுமி வீட்டிற்கு வரவில்லை இதனால் பதட்டம் அடைந்த சிறுமியின் பெற்றோர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, 3 நாட்கள் கழித்து Quesnoy-sur-Deule பகுதியில் உள்ள காடு ஒன்றில் இருந்து குறித்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்ட சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பொலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலையில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 45 வயது நபர் ஒருவரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், அந்த நபர் மீது ஏற்கெனவே பாலியல் துஷ்பிரயோக வழக்கு ஒன்றும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Most related Tamil news
- அடுத்தவர்களை உயர்த்தி விடுவதில் அஜித்துக்கு நிகரில்லை!
- ஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகமா அபிஷேக் மேல?
- முகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருமானம் 107 கோடியாம் : ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி!
- ஒரே நாளில் ஒரே இடத்தில் 140 குழந்தைகள் கோரமாக நரபலி! மனதை உருக வைக்கும் அகழ்வாராய்ச்சி!
- தல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி
- ஸ்ரீ லீக்ஸ் புகழ் நடிகைக்கு ஓகே சொன்ன பிரபல இயக்குனர்!
- வலி நிவாரணியால் ஓரின சேர்க்கையாளராக மாறிய இளைஞர்! என்ன கொடுமை இது!
**Tamil News Groups Websites**