89 வயதுடைய கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் 10 மாதம் மதிக்கத்தக்க குழந்தை ஒன்றை கன்னத்தில் அறைந்த காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. Christian priest slaps 10 month child
கடந்த ஜூன் 17 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட குறித்த 40 வினாடிகள் கொண்ட காணொளி தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவி வருகின்றது.
குறித்த குழந்தைக்கு பாதிரியார் ஞானஸ்தானம் வழங்கும்போது, அந்த குழந்தை அழுது கொண்டிருந்துள்ளது. உடனே பாதிரியார் அதனை சமாதானப்படுத்த முற்பட்டுள்ளார். ஆனால் குழந்தை தொடர்ந்து அழ, பாதிரியார் குழந்தையின் கன்னத்தில் அறைந்து விடுகிறார்.
இந்த காட்சி தொலைபேசியில் காணொளியாக பதிவாகப்பட்டு, தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
இதனால், குறித்த பாதிரியாரை திருமண நிகழ்வுகளிலோ, ஞானஸ்தானம் செய்யும் நிகழ்வுகளிலோ ஈடுபடக்கூடாது என Champeaux ( Seine-et-Marne )ஐச் சேர்ந்த diocese of Meaux தடை விதித்துள்ளது. அத்துடன், இந்த மோசமான செயலுக்கு அவர் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் விவாதங்கள் எழுந்துள்ளன.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- அல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்!
- பாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- இளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா? கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க!



