வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..

0
531

நவீன வாழ்க்கை முறை மற்றும் ஒழுங்கற்ற பழக்க வழக்கங்களால் இந்த நாட்களில் உடல் பருமன் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது.

அலுவலகத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது, உடல் உழைப்பு இல்லாமை போன்றவையும் உடல் எடை கூடுவதற்கு ஒரு காரணமாக அமைகின்றன. உடல் எடையை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம்.

ஜிம் சென்று உடற்பயிற்சி செய்கிறோம். கடினமான உணவு கட்டுப்பாடுகளை மெற்கொள்கிறோம். ஆனால் இவற்றால் அனைவருக்கும் வேண்டிய பலன் கிடைப்பதில்லை.

வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits Of Drinking Water On An Empty Stomach

எனினும் சில இயற்கையான, எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை முக்கியம்.

காலை வழக்கங்கள் மற்றும் காலையில் நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களின் தேர்வு உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

பானத்தின் தேர்வு எடையைப் பொறுத்தது. ஆரோக்கியமான காலை பானத்தை உட்கொண்டால் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும்.

வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits Of Drinking Water On An Empty Stomach

எடை இழப்புக்கான காலை பானம்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற காலை பானம் ஒன்று உள்ளது. அதுதான் இதமான இளநீர்.

தினமும் காலை வேளையை இளநீருடன் தொடங்கினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

மிக அற்புதமான பலன்களைப் பெற இளநீருடன் சப்ஜா விதைகளை சேத்து குடிக்கலாம்.

ஒரு கிளாஸ் இளநீரில் 46 கலோரிகள் மற்றும் 9 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமே உள்ளன.

இது தவிர இதில் எலக்ட்ரோலைட்டுகள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இதை குடித்தால் வயிற்றுக்கு நிரம்பிய உணர்வு கிடைப்பதுடன் உடல் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இது உடலை நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits Of Drinking Water On An Empty Stomach

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்

இளநீரில் லாரிக் அமிலம் உள்ளது. இது ஒரு வகை கொழுப்பு அமிலம் ஆகும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் கலோரிகளை மிகவும் திறமையாக எரிக்கிறது இது எடையை இழக்க உதவும்.

வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits Of Drinking Water On An Empty Stomach

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

இளநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.

ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பல நோய்களை ஏற்படுத்தும்.

இளநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits Of Drinking Water On An Empty Stomach

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

இளநீரில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

நார்ச்சத்து செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.

வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits Of Drinking Water On An Empty Stomach

இதயத்திற்கு ஆரோக்கியமானது

இளநீரில் போதுமான அளவு பொட்டாசியம் உள்ளது. இது ஒரு முக்கியமான கனிமமாகும்.

இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பணியையும் செய்கிறது.

மேலும் இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.