இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ”சர்கார்” பட போஸ்டரில் விஜய் தம்மடித்தது பெரிய பிரச்சனையாகியுள்ள நிலையில், இருக்கிற பிரச்சனை போதவில்லை என்று ஸ்ரீ ரெட்டி வேறு ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.(Sri Reddy green park hotel warning Ar Murugadoss)
இது தொடர்பில் தெரியவருவதாவது.. :-
தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி வந்த ஸ்ரீ ரெட்டி, சமீபத்தில் தமிழ் இயக்குனர் ஒருவரை பற்றி கூறியிருந்தது யார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சினிமா வாய்ப்பு தருவதாக ஏமாற்றி பிரபலங்கள் பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அவர்கள் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் தொடர்ந்து வெளியிடுவேன் என்றும் அறிவித்து உள்ளார்.
சில நடிகர்களும், தயாரிப்பாளர்களும் ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி அங்கு பெண்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
மேலும், சமீபத்தில் தமிழ் சினிமா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. ஆனால், இங்கும் பாலியல் தொந்தரவு இருக்கிறது. ஒரு மிகப்பெரிய இயக்குநர், பட வாய்ப்புத் தருவதாகக் கூறி என்னை பயன்படுத்திக் கொண்டார். நேரம் வரும்போது கண்டிப்பாக அதை பகிரங்கமாக சொல்வேன் என்று ஸ்ரீ ரெட்டி கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது தனது சமூக வலைத்தளத்தில், “தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஜி. எப்படி இருக்கீங்க… கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கா? வெள்ளி கொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். எனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லியிருந்தீர்கள். ஆனால், நாம் நிறைய ….? இன்னும் நீங்கள் எந்த வாய்ப்பும் தரவில்லை. நீங்கள் எப்போதும் நல்ல மனிதர்” என பதிவு செய்திருக்கிறார்.
ஸ்ரீரெட்டி இப்படி பதிவு செய்திருப்பது, தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
<MOST RELATED CINEMA NEWS>>
* இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!
* சாமி ஸ்கொயர் படத்தின் அதிரூபனே.. அதிகாரனே.. சிங்கிள் டிராக் ரிலீஸ்..!
* குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!
* காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!
* பாவனா போன்று நானும் கடத்தப்பட்டேன் : நடிகை பார்வதி பரபரப்புத் தகவல்..!
* அஜித்தையும் விட்டுவைக்காது நக்கல் செய்து புதிய போஸ்டரை வெளியிட்ட தமிழ்ப்படம் 2 படக் குழு..!
* ரஜினியின் 2.0 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!
* எதிர்வரும் 13 ஆம் திகதி திரைக்கு வரும் கடைக்குட்டி சிங்கம் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!
* விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!