இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், பிராந்திய பதற்றங்களின் பின்விளைவுகள் மற்றும் அவற்றின் விரிவான தாக்கங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர் இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” கொள்கை மற்றும் “மகாசாகர் தொலைநோக்கு” முயற்சிக்கு தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்துள்ளார்.



