பிரித்தானியாவில் சர்வதேச பயணங்களுடன் தொடர்பு ஏதும் இல்லாத பலருக்கு தென் ஆப்பரிக்காவில் தோன்றிய புதிய வகை கொரோனா பாதிப்பு இருக்கும் என்று Birmingham பேராசிரியர் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவில் தற்போது வரை சுமார் 107 பேர் தென் ஆப்பிரிக்க கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதி
ல் 11 பேருக்கு சர்வதேச பயண தொடர்பு ஏதும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் Birmingham பல்கலைக்கழகத்தின் Microbial Genomics and Bioinformatics பேராசிரியர் நிக் லோமன் கூறியதாவது, பிரித்தானியாவில் சர்வதேச பயண தொடர்பு ஏதும் இல்லாமல் தென் ஆப்பரிக்கா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஏனென்றால் மொத்த வழக்குகளின் விகிதத்தை மட்டுமே நாம் பார்க்கிறோம், எனவே சர்வதேச பயண தொடர்பு ஏதும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11-க்கும் அதிகமாக இருக்கும்.
தென் ஆப்பிரிக்கா தொற்று
இருந்த எல்லா இடங்களையும் கண்டறிவது மிகவும் கடினம். ஆனால் ஒரு சிறிய பகுதியினர் தொற்றை பரப்புவதை தவிர்க்க முடியாதது, மேலும் அந்த பரவல் மிகப் பெரியதாகிவிடும் என பேராசிரியர் நிக் லோமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.