பிரபல பாடகி கணவரால் சுட்டுக் கொலை!

0
836
Singer reshma shot Tamil News

 

பாகிஸ்தானில் பிரபல பாடகியான ரேஷ்மா தனது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Singer reshma shot Tamil News

பாகிஸ்தானில் பிரபல பாடகியான ரேஷ்மா நவ்ஷெரா கலான் பகுதியில் வசித்து வந்தார். பாடகியான ரேஷ்மா நாடங்களிலும் நடித்துள்ளார்.

ரேஷ்மா தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று ரேஷ்மாவின் வீட்டினுள் நுழைந்த, அவரது கணவர் ரேஷ்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் ரேஷ்மாவின் கணவர், ரேஷ்மாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் ரேஷ்மா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள போலீஸார் தப்பியோடிய ரேஷ்மாவின் கணவரை தேடி வருகின்றனர். பாகிஸ்தானில் பெண் கலைஞர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.