பாலியல் உறவுக்கு ஒத்துழைக்காததால் கொலை செய்தேன்!

0
1664
dont cooperate sexual relations Coimbatore

dont cooperate sexual relations Coimbatore

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சிவகுமார் – ஜெயந்தி தம்பதியர்.

கடந்த 18ஆம் தேதி ஜெயந்தியை காணவில்லை என சிவகுமார் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விதாரித்து வந்தனர், இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் பகுதியில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கால்வாயினுள் ஒரு சடலம் கிடைப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது, உடலை கைப்பற்றிய காவல் அதிகாரி அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சாக்கு மூட்டையில் ஒரு பெண் சடலம் இருந்ததால் அப்பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்து வந்த புகார்களை ஆராய்ந்தனர், பிறகு விசாரணையில் அந்த சடலம் காணாமல் போன ஜயந்தி என்பது தெரியவந்தது.

இது குறித்து ஜெயந்தியின் கணவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் சிவகுமார் கூறியதாவது – அமைச்சர் விஜயபாஸ்கரன் வீட்டில் ஜெயந்தி வீட்டு வேலை பார்த்து வந்தார், அதே வீட்டில் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த மணிவேல் என்பவருடன் ஜெயந்தி பழகி வந்ததாகவும் கூறினார், பிறகு கார் ஓட்டுநர் மணிவேலை இது குறித்த விசாரணைக்கு காவல்துறையினர் அழைத்தனர்,

கார் ஓட்டுநர் மணிவேலிடம் விசாரித்தபோது – அவர் ஜெயந்தியிடம் உறவுகொள்ள முன்றதாகவும் அதற்கு ஜயந்தி ஒத்துழைக்காததால் நைலான் கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார், மேலும் அவர் ஜெயந்தி அணிந்திருந்த 4 சவரன் நகையை எடுத்துவிட்டு ஜெயந்தியின் உடலை ஒரு சாக்குப்பையில் கட்டி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று குளத்தேரி சாக்கடை கால்வாயில் வீசி சென்றதாக அவர் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து மணிவேலை கைது செய்த காவலர்கள் அவரை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

More Tamil News

Tamil News Group websites :