நாவற்குளி: உரித்து ஆவணங்கள் இருப்பின் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

0
572
Navatkuli Land Issue

காணி தொடர்பான உரித்து ஆவணங்கள் இருப்பின் அடுத்த தவணையின் போது நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு, நாவற்குளிப் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறிக் குடியேறியுள்ள குடும்பங்களுக்கு சாவகச்சேரி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. Navatkuli Land Issue

நாவற்குளியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறிக் குடியேறியுள்ள 62 குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு அதிகார சபையின் தலைவர், சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. குடியிருப்பாளர்கள் குடியிருக்கும் காணி தொடர்பான உரித்து ஆவணங்கள் இருப்பின் அடுத்த தவணையில் நீதிமன்றில் சமர்ப்பிக்கமாறும், வழக்குகளை ஒக்டோபர் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை