தடுப்பூசி திட்டத்தில் திணறும் ஜேர்மனி… மக்களிடம் தப்பிக்க அரசியல்வாதிகள் செய்துள்ள மட்டமான செயல்!

0
535

கொரோனா பரவலை சமாளிப்பதில் உலகுக்கே முன்னோடியாக பார்க்கப்பட்ட ஜேர்மனி, இப்போது தடுப்பூசி போடும் திட்டத்தில் திணறிவருகிறது.

முதல் கொரோனா அலையின்போது, அதை சமாளிக்க மற்ற நடுகள் திணறிக்கொண்டிருந்தபோது, திறம்பட கொரோனா பரவலை சமாளித்ததற்காக மொத்த உலக நாடுகளும் ஜேர்மனியை வியந்து நோக்கின, பாராட்டவும் செய்தன.

ஆனால், இப்போது நாட்டில் கடுமையாக கொரோனா பரவிவருவதோடு, கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை நிறைவேற்றவும் திணறி வருகிறது ஜேர்மனி.

மாதம் ஒன்றிற்கு 2 சதவிகிதம் பேருக்கு மட்டுமே ஜேர்மனி தடுப்பூசி போட்டு வருகிறது, இதுவே, இஸ்ரேல் நாளொன்றிற்கு தன் மக்கள்தொகையில் 2 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி போட்டு தடுப்பூசி போடும் திட்டத்தில் முன்னிலை வகிக்கிறது.

பிரித்தானியாவில் இதுவரை 7 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டாயிற்று, ஆனால், ஜேர்மனியில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1.8 மில்லியன் மட்டுமே.

இதனால், மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெறுவதற்காக, கவனத்தை திசை திருப்புவதற்காக, மட்டமான செயல் ஒன்றில் இறங்கினார்கள் ஜேர்மன் அரசியல்வாதிகள் சிலர்.

பத்திரிகையாளர்களிடன், பிரித்தானிய தயாரிப்பான ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி சரியாக வேலை செய்யவில்லை என்ற பொய்யை பரப்பிவிட்டார்கள் சிலர்.

பெரும்பாலான ஊடகங்களில் அந்த செய்தி வெளியாக, பின்னர் அந்த செய்தி உண்மையில்லை என ஜேர்மன் சுகாதாரத்துறையே மறுப்புத் தெரிவித்ததோடு, ஆஸ்ட்ராசெனகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஜேர்மன் மற்றும், பிரித்தானிய அரசாங்கங்களும் மறுப்பு தெரிவித்தன.

என்றாலும், சில ஊடகங்கள் அந்த போலிச்செய்தியை விலக்கிக்கொண்ட நிலையில், சில இன்னமும் அதே செய்தியை பரப்பிக்கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில், உற்பத்திக் குறைவு காரணமாக மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தடுப்பூசி சப்ளை பாதிக்கப்படும் என ஆஸ்ட்ராசெனகா தெரிவிக்க, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மிரட்டும் தொனிக்கு இறங்கிவிட்டார்கள்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவரான Ursula von der Leyen, ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பூசி தயாரிப்புக்கு ஆரம்பத்திலேயே நிதியுதவி செய்தது, ஆகவே, தடுப்பூசி நிறுவனங்கள் தாங்கள் சொன்னதுபோல் தங்கள் வார்த்தையைக் காப்பாற்றவேண்டும் என்று கூறி தன் பங்கு கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டுள்ளார்.