கொழும்பில் தங்கையின் திருமணத்தில் உயிரை விட்ட அண்ணன்!

0
572

தங்கையின் திருமண நிகழ்வில் அண்ணன் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 25ஆம் திகதி கொழும்பு பிலியந்தல பிரதேசத்தில் திருமணமொன்று நடந்தது.

அதில், திருமணம் முடிந்த நொடியிலேயே மணமகளின் மூத்த சகோதரன் திடீரென கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது அவரது உயிர் பிரிந்துவிட்டது. நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருக்கவில்லை என அறிவிக்கப்பட்டது.

கடவத்தை -மஹர பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று குழந்தைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் அவரது மரணத்திற்கு மாரடைப்பே காரணம் என்றும் கூறப்படுகின்றது