இலங்கை இராணுவத்தினருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் யோச னையை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் முன்வைக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியிருந்தது. அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் பத்தி ரிகை ஆசிரியர்களுடனான ஊடகச் சந்திப்பில் அரச தலைவர் மைத்திரிபால கருத்து வெளியிட்டிருந்தார்.
அரச தலைவர் இத்தகைய யோசனையை முன்வைப்பதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. எதிர்க்கட்சியாக இருந்தாலும் அரசுடன் இணங்கிச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச தலை வரின் யோசனைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்ததுடன், அந்த யோசனையை ஏற்கக் கூடாது என்று இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஊடாக ஐ.நா. பொதுச் செயலருக்குத் தெரி யப்படுத்தியிருந்தது.
இதனையடுத்து இறுதி நேரத்தில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் தனது உரையில் அத்தகைய யோசனையை முன்வைப்பதிலிருந்து பின்வாங்கினார். சர்ச்சைகளைத் தவிர்க்கும் வகையில், அவர் தனது பேச்சில் அத்தகைய விடயங்களைத் தொட்டுக் காட்டவில்லை.
அரச தலைவர் முன்வைக்க இருந்த யோசனையை உள்ளடக்கியதான அவரது உரை,
எதிர்ப்புக்களையடுத்தே இறுதி நேரத்தில் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரச தலைவருடன் நியூயோர்க் சென்றுள்ள அமைச்சர் மனோகணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். ‘உண்மையில் அரச தலைவர் ஆற்ற வந்த உரை இதுவல்ல. ஆனால் இறுதித் தினங்களில் உரை வடிவம் மாற்றப்பட்டது. அது எப்படி, ஏன் என்ற விவரங்களை பகிரங்கமாகச் சொல்ல முடியாது. சொன்னாலும் பலருக்கு புரியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் உதவியைப் பெற்றுக்கொள்ளுதல் நாட்டின் இறைமைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் இராணுவத்தினரின் மதிப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்தல் தொடர்பாக இதன்போது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சிறப்பு முன்மொழிவொன்றை முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாக அரச தலைவர் மைத்திரிபால நியூயோர்க் பயணமாவதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, மனோகணேசன் தனது முகநூல் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘அமைச்சர் மனோ கணேசன், என்ன, என் உரையில் சர்ச்சை எதுவும் இல்லை தானே! இப்போது திருப்திதானே?’
ஐ.நா. சபையில் உரை நிகழ்த்தி இறங்கி வந்ததும் அமைச்சர்கள் குழு அரச தலைவரைச் சூழ்ந்த போது, என்னை அழைத்த மைத்திரி, என் தோளில் கைகளை போட்டவாறு இப்படிக் கேட்டார்.
ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்து பேசி அதிலே திருத்தம் செய்ய வேண்டும் என்று, மைத்திரி, ஐ.நா. சபையில் தனது உரையின் போது கோரிக்கை முன் வைக்க போகிறார் என்;று இலங்கையில் பரபரப்பாக பேசப்பட்டது. அப்படி சர்ச்சைக்கு உரிய கருத்துகள் எதுவும் அரச தலைவரின் உரையில் இடம்பெறவில்லை.
வழமையாக இலங்கையிலே பேசுகின்ற கருத்துகளையே தனது உரையிலே குறிப்பிட்டார். ஆக, போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இனிமேல் பன்னாட்டுச் சமூகம் எனது நாட்டை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்’ என்று மேலதிகமாக குறிப்பிட்டார்.
‘அந்தப் புதிய கண்ணோட்டம் என்னவென்று நீங்கள் இங்கே கூறவில்லை. நல்லது. அது என்னவென்று ஊருக்கு போய் விளக்கமாக சொல்லுங்கள் அரச தலைவரே’ என்று நான் கிண்டலாக சொல்ல, அனைவரும் சிரித்தார்கள் – என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!
ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!
கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்!
அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் உண்ணாவிரத போராட்டம்