சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் ரயில் நிலைய காத்திருக்கும் அறைக்கு நெருப்பு வைக்கப்பட்ட விவகாரத்தில் பொலிசா சாட்சிகளை தேடுகின்றனர்.
பாஸல் நகர ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 7.45 மணியளவில் கத்திருக்கும் அறைக்கு ஒருவர் நுழைந்துள்ளார்.
அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியவர், தொடர்ந்து அந்த அறை முழுவதும் கொண்டுவந்த திராவகத்தை ஊற்றியுள்ளார்.
பின்னர் அந்த அறைக்கு நெருப்பு வைத்துவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். இச்சம்பவத்தை கவனித்த சிலர் உடனடியாக ரயில் நிலைய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்க,
அவர்கள் துரிதமாக செயல்பட்டு நெருப்பை அணைத்ததுடன், அந்த நபரையும் பிடித்து வைத்துள்ளனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு துறையும் பொலிசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
35 வயது மதிக்கத்தக்க அந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், குறித்த விவகாரம் தொடர்பில் சாட்சிகளை பொலிசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றத்திற்கான நோக்கம் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை எனவும் விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.