ஊர் அநுரவோடு செல்வதை தடுக்க எதிரணிகள் கங்கணம்!

0
29

இலங்கையில் 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களில் 336 சபைகளுக்குரிய தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அரசியல் களம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பொதுத் தேர்தலின்போது மட்டக்களப்பு மாவட்டம் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ‘என்.பி.பி.” அலையே கோலோச்சியது.

எனவே குட்டி தேர்தலிலும் வெற்றி நடைபோட்டு – நாடு மட்டுமல்ல ஊரூம் எங்களோடுதான் என்பதை காண்பிப்பதற்குரிய முயற்சியில் ஆளுங்கட்சி ஈடுபட்டுள்ளது.

அரசாங்கத்தின் பயணம் தொடர்பான மக்களின் அபிப்பிராயத்தை அறிவதற்குரிய ஒரு ஆய்வாக இத்தேர்தலை ஆளுங்கட்சி பார்க்கின்றது.

மறுபுறத்தில் தேசிய மக்கள் சக்தியின் ‘ஹெட்ரிக்” வெற்றியை தடுத்து மக்கள் தம்மை நிராகரிக்கவில்லை தமக்கான அரசியல் இருப்பு உறுதியாகவே உள்ளது என்பதை காண்பிப்பதற்கு எதிரணிகள் கங்கணம் கட்டி செயல்படவுள்ளன.

தமக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும் என்.பிபிக்கு பெரும் வெற்றி கிடைப்பதை தடுக்க வேண்டும் என்ற மாற்று திட்டமும் வகுக்கப்பட்டு வருகின்றது.