ஈரான் – இஸ்ரேல் போர்ச் சூழல் காரணமாக சவூதி அரேபியாவில் 109 இலங்கையர்களும், ஓமானில் 22 இலங்கையர்களும் விமான நிலையங்களில் சிக்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஓமானில் சிக்கியிருந்தவர்களில் சிலர் நேற்று அதிகாலை இலங்கை வந்தடைந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் உள்ள உறவினர்களை மீட்கக் கோரி 10 கோரிக்கைகள் கிடைத்துள்ளதோடு நான்கு பேர் தமது உறவினர்களுடனான தொடர்பை இழந்துள்ளதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
ஈரான் – இஸ்ரேல் போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கு அமைவாக அவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினார்.



