President Trump Gun Law
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் துப்பாக்கிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படவேண்டும் எனும் வேண்டுகோள்களை நிராகரித்துள்ளார்.
ஃப்ளோரிடாவில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து துப்பாக்கிகளுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும் எனும் வேண்டுகோள்கள் அதிகரிக்கத் தொடங்கின.
டல்லாஸ்சில் நடைபெற்ற தேசிய துப்பாக்கிச் சங்க ஆண்டுக்கூட்டத்தில் அவர் பேசினார்.
அப்போது கடுமையான துப்பாக்கிச் சட்டங்களைச் செயல்படுத்தி வரும் பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளை டிரம்ப் சாடியுள்ளார்.
குடிமக்கள் ஆயுதங்கள் வைத்திருந்தால் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களும் கத்திக்குத்துகளும் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.