ரம்புக்கனை பகுதியில் மறு அறிவித்தல் வரை ஊடரங்கு உத்தரவு

0
595

ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவினை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் வசிப்பவர்களை வீடுகளிலேயே இருக்குமாறும்,ரம்புக்கனை பகுதியினூடாக பயணிப்பவர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரியுள்ளார்.