உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர் தெரிவில் இடம்பிடித்த பெத்தும் நிஸ்ஸங்க

0
141

சர்வதேச கிரிக்கெட் பேரவை பிப்ரவரி மாதத்திற்கான உலகின் சிறந்த கிரிக்கெட் வீரரை தெரிவு செய்வதற்காக மூன்று சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ள நிலையில் அவர்களில் பெத்தும் நிஸ்ஸங்க இடம் பிரித்துள்ளார். அவர்களில் சிறந்த வீரர் இணையவழி வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளார்.

இதன்படி, இவ்வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெற்ற மூன்று சிறந்த வீரர்களுக்கான பரிந்துரையில் இலங்கையின் பிரபல ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்கவும் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இரட்டை சதம் அடித்து சாதனை படைந்திருந்தமை இதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது.

மேலும் தெரிவு செய்யப்பட்ட ஏனைய இரு வீரர்களாக இந்திய இளம் துடுப்பாட்ட வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் ஆகியோர் உள்ளனர்.