பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட அனிமேஷன் காணொளி: இந்திய தேர்தல் பிரச்சார களத்தில் கார்ட்டூன் அரசியல் போர்

0
45

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட அனிமேஷன் காணொளி வெளியான ஒரே நாளில் அகற்றப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் வெறுப்புப் பேச்சு மற்றும் விமர்சனம் காரணமாக இந்த அனிமேஷன் காணொளி அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காணொளி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இல்லை என்ற போதிலும், ஏனைய சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

தற்போது வெறுப்பு பேச்சைக் கட்டுப்படுத்துவது என்பது சவாலான விடயமாக காணப்படுகின்றது. தேர்தலின் போதான வெறுப்பு பேச்சு தொடர்பில் இந்திய தேர்தல் ஆணையம் பிரத்தியேக கவனம் செலுத்தி வருகிறது.

இந்த காணொளி நிச்சயமாக பரபரப்பை ஏற்படுத்துவதாக இருக்கின்றபோதிலும், சில அதீத ஆர்வமுள்ள பி.ஜே.பி. ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டதாக குறிப்பாக கவனத்தை ஈர்த்துள்ளது.

பல ஜனநாயக நாடுகளில் பிரசாரத்தின் போது இவ்வாறான சம்பவங்கள் நிகழலாம் எனவும், இது பொதுவாக அரசியல் கட்சி ஒன்றின் உத்தியோகபூர்வ பிரச்சார காணொளி அல்ல எனவும் தெளிவுபடுத்தும் அறிக்கைகள் வெளியிடப்படுவதை காணமுடிகிறது.

ஆகவே, இந்தக் காணொளியை பாரதிய ஜனதா கட்சி ஏற்காததை இந்த அறிக்கைகள் வெளிக்காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இதற்கு நேர் மாறாக, பி.ஜே.பி வெளியிட்ட காணொளியின் உள்ளடக்கம் உண்மையில் இராஜஸ்தானில் கடந்த மாதம் பிரச்சார நடவடிக்கைகளின் போது மோடி ஆற்றிய உரையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், இந்த காணொளி சில வல்லுநர்களால் பழைய பாணி பிரசார பேரணிகள் மற்றும் நிகழ்நிலை உள்ளடக்கம் ஆகியவற்றுக்கு இடையிலான இருவழி உறவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்நிலை உள்ளடக்கத்திற்கான தேவையும், அரசியல் கட்சிகள் எவ்வாறு வெகுஜன பிரசார பேரணிகளை நடத்துகின்றன என்பதை வடிவமைப்பதாக குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை நிகழ்நிலை தளங்களின் பயன்பாடு பரவலாக காணப்படுகிறது. பில்லியன் கணக்கான மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்கள் நவீன கையடக்கத்தொலைபேசி பாவனையாளர்களாக உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக நடத்தப்பட்ட பொதுத் தேர்தல் “வாட்ஸ்அப் தேர்தல்” என அழைக்கப்பட்டது.

பாஜக காணொளி ஏன் சர்ச்சைக்குரியது?

இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மற்றும் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் காணொளி அமைந்துள்ளது.

பிஜேபியின் இந்து தேசியவாதத்தை அடைப்படையாகக் கொண்டு, பாகிஸ்தான் கொடியின் சின்னமும் நிறங்களும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் காங்கிரஸை முஸ்லீம்களை திருப்திப்படுத்தும் கட்சியாகக் வெளிக்காட்டுவதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காணொளியில் முஸ்லிம்கள் இடைக்கால கவசத்தில் படையெடுக்கும் படைவீரர்களாகவும், கண்கள் மின்னுவதாகவும், கைப்பற்றப்பட்ட இராஜ்யங்களைக் கொள்ளை அடிப்பவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அனிமேஷனை பயன்படுத்தும் எதிர்க்கட்சிகள்

அனிமேஷன் காணொளிகளை ஏனைய கட்சிகளும் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றன. காங்கிரஸ் கட்சியின் பிரபலமான அனிமேஷன் காணொளியொன்று ‘Washing Machine’ என அழைக்கப்படுகிறது.

இது எதிர்தரப்புகள் ‘வரி பயங்கரவாதம்’ அல்லது நாட்டின் சக்திவாய்ந்த அமலாக்க இயக்குநரகத்தால் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளுடன் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை குறிவைப்பது குறித்து கவனம் செலுத்துகிறது.

1980களில் ஹொலிவுட்டின் “செவன் ப்ரைட்ஸ் ஃபார் செவன் பிரதர்ஸ்” என்ற ஹிந்தித் திரைப்படத்தின் ரீமேக்கான பொலிவுட் படமான “சட்டே பே சத்தா”வில் இருந்து நன்கு அறியப்பட்ட பாடலை இந்த வீடியோ கொண்டுள்ளது.

இந்திய தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இந்த அனிமேஷன் காணொளிகளே கார்ட்டூன் அரசியலின் போர் என பிரதான பத்திரிகைகள் அழைக்க வழிவகுத்தது.