நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை

0
55

நாடளாவிய ரீதியில் 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை (GCE O/L) இன்று (06) ஆரம்பமாகியுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்தப் பரீட்சையானது நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 3,527 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 111 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 13902 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இதில் பாடசாலை பரீட்சார்த்திகளாக 10037 பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 3865பேரும் தோற்றுவதுடன் தமிழ் மொழியில் 13826 பரீட்சாத்திகளும் சிங்கள மொழியில் 10 பரீட்சாத்திகளும் ஆங்கில மொழியில் 66 பேரும் தோற்றுவதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண மாவட்டத்திலும் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் சென்றுள்ளதைக் அவதானிக்க முடிந்துள்ளது.

கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வயலங்களையும் சேர்ந்த 4026 மாணவர்கள் இன்று ஆரம்பமான க.பொ.த.சாதாரன தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

பாடசாலை ரீதியாக 3519 பரீட்சார்த்திகளும் 507 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 4026 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

நுவரெலியா

2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில் நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் அதிகளவான பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.