ஆசிய அளவில் மிகவும் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா? இலங்கைக்கு கிடைத்த இடம்?

0
75

ஆசியா அளவில் மிகவும் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமை சிங்கப்பூருக்கு கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து 2வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த 2024 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான (World Happiness) நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தொடர்ந்து 7வது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் பட்டியலில் பின்லாந்து முதலிடத்திலும், டென்மார்க் மற்றும் ஐலாந்தும் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

இந்த தரவரிசைப் பட்டியலில் இலங்கை 128 வது இடத்தையும் இந்தியா 126 வது இடத்தையும் பிடித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆசியாவின் முதல் 10 இடத்தை பிடித்த மகிழ்ச்சியான நாடுகள்

சிங்கப்பூர்

தைவான்

ஜப்பான்

தென் கொரியா

பிலிப்பைன்ஸ்

வியட்நாம்

தாய்லாந்து

மலேசியா

சீனா

மங்கோலியா