மூன்றாம் உலகப்போர் மூளும்: தேர்தல் வெற்றியை தொடர்ந்து மேற்குலக நாடுகளை எச்சரிக்கும் புட்டின்

0
69

ரஷ்ய ஜனாதிபதி விளடிமீர் புட்டின் வெள்ளியன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். மூன்றாவது தடைவையாகவும் அவர் பதவி ஏற்றுள்ளார்.

இந்நிலையில் இந்த தேர்தல் வெற்றியை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில் மூன்றாம் உலகப்போர் மூளும் என மேற்குலக நாடுகளை எச்சரித்துள்ளார்.

“அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது என்பது இந்த உலகம் மூன்றாம் உலகப் போரை எதிர்கொள்வதற்கு வெகு அருகில் நிற்கிறது என்று அர்த்தம். அத்தகைய சூழலை எவருமே விரும்பமாட்டார்கள்.

ஆனால், இந்நவீன உலகத்தில் எதுவும் சாத்தியமே. ஆனால் உக்ரைனில் நேட்டோ படைகள் உள்ளன. அவற்றில் ஏற்கெனவே ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரெஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர்.

அவர்கள் அங்கே கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கின்றனர். சம்மபந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெற்றுக் கொள்வதே நன்மை.

சிறையில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவல்னியை நான் விடுதலை செய்யவே விரும்பினேன். ஆனால் அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். மேற்கத்திய நாடுகளின் சில சிறைகளில் இருக்கும் ரஷ்யக் கைதிகளுக்கு மாற்றாக நவல்னியை விடுவிக்க ஒப்புக் கொண்டிருந்தேன்.

ரஷ்ய தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நகைப்புக்குரியது” என தெரிவித்துள்ளார்.