அரசிகளால் கட்டப்பட்ட பிரம்மாண்ட கோட்டைகள்!: புகழைப் பறைசாற்றும் நினைவுச் சின்னங்கள்

0
75

இந்தியாவைப் பொறுத்தவரையில் கட்டிடக் கலைக்கும் நுட்பமான வேலைப்பாடுகளுக்கும் பெயர்போன நாடு. அந்த வகையில் பெரும்பாலான அரசர்கள் தமது புகழை நிலைநிறுத்திக்கொள்ள, பல நினைவுச் சின்னங்களையும் கட்டிடங்களையும் நிறுவினர்.

அரசர்கள் மட்டுமில்லாமல் அரசிகளும்கூட சில நினைவுச் சின்னங்களை நிறுவியுள்ளனர். அந்த வகையில் அரசிகளால் கட்டப்பட்ட சில கட்டிடங்கள் குறித்து பார்ப்போம்.

இதிமத் – உத் – தௌலா, ஆக்ரா

1622 மற்றும் 1628ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டப்பட்டது. இது பேரரசி நூர்ஜெஹானால், தனது தந்தை மிர் கயாஸ் பேக்கிற்காக அமைக்கப்பட்டது. அமைதியான தோட்டத்தில் அமைந்துள்ள இந்த அமைப்பானது, பவளப்பாறைகளுடன் சிவப்பு, மஞ்சள் மணற்கற்களினால் நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டது. மேலும் இதை ‘பேபி தாஜ்’ என்றும் அழைக்கின்றனர்.

ஹூமாயூனின் கல்லறை, புதுடெல்லி

1565 மற்றும் 1572ஆம் ஆண்டுக்கு இடையில் ஹமிதா பானு பேகத்தால் கட்டப்பட்டதே இந்த கல்லறை. இதுதான் இந்தியாவின் முதல் தோட்டக் கல்லறையாகும்.

ராணி கி வாவ், படன், குஜராத்

1063ஆம் ஆண்டு சோலங்கி வம்சத்தைச் சேர்ந்த ராணி உதய்மதியினால் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. இந்த தலைகீழ் கோயில் தண்ணீருக்கு ஒரு காணிக்கையாக உள்ளது.

விருபாக்ஷா கோவில், பட்டடகல்

கி.பி 740இல் லோகமஹாதேவியால் கட்டப்பட்டது இந்தக் கோவில். தனது கணவர் இரண்டாம் விக்ரமாதித்யன் பல்லவர்களை வென்றதைக் கொண்டாடுவதற்காக இந்தக் கோயிலைக் கட்டினார் லோகமஹாதேவி.

மிர்ஜான் கோட்டை, கர்நாடகா

16ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிளகு ராணி என அழைக்கப்படும் சென்னபைராதேவி ராணியினால் கட்டப்பட்டது இந்த கோட்டை. இந்த கோட்டையானது படையெடுப்பாளர்களிடமிருந்து பாதுகாப்பை வழங்கியது.