அம்பானி வீட்டு விழாவில் சர்ச்சை.. பணிப்பெண்ணை தள்ளி நிற்க சொன்ன ரஜினிகாந்த் (video)

0
64

அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் குடும்பத்துடன் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தன்னுடன் வந்த பணிப்பெண்னை தள்ளி நிற்க சொன்னதாக பரவும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அம்பானி வீட்டு விழாவில் ரஜினிகாந்த்

Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், கடந்த 1 -ம் திகதி குஜராத்தின் ஜாம் நகரில் தொடங்கிய திருமணத்தின் முந்தய கொண்டாட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

சர்ச்சை வீடியோ

அப்போது, திருமண விழாவில் புகைப்படம் எடுக்கும் போது தன்னுடன் வந்த பணிப்பெண்ணை நடிகர் ரஜினிகாந்த் ஓரமாக நிற்கும்படி கூறியதாக வெளிவந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் திருமண விழாவில் பங்கேற்க வருகை தந்து கொண்டு இருக்கின்றனர். அப்போது, அவர்களுடன் பணிப்பெண்ணும் வந்துள்ளார்.

அங்கு, ரஜினிகாந்தை பார்த்ததும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர். உடனே, தன்னுடன் வந்த பணிப்பெண்ணை பார்த்து கையசைத்த ரஜினிகாந்த் ஏதோ சொல்வது போல தெரிகிறது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.