பசில் ராஜபக்சவின் இலங்கை விஜயம்..விமான நிலையத்தில் குவிந்த அரசியல்வாதிகள்

0
88

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிலிருந்து இன்று(05) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரை வரவேற்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகள் குழுவும் கலந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தைகள் 

சுமார் இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் வருகையின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கு பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.