பண்டைய ரோம் பேரரசில் சம்பளமாக வழங்கப்பட்ட உப்பு: Salary என்ற ஆங்கில சொல் உருவான விதம்

0
94

வாழ்வாதாரத்திற்காக தொழில் புரிவோருக்கு வாழ்க்கையில் சம்பளம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால்,ஊழியர்கள் மாதந்தோறும் சம்பளத்திற்காக காத்திருக்கின்றனர்.

ஒரு காலத்தில் தொழில் புரிவோருக்கு சம்பளமாக உப்பு வழங்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் ரோம் பேரரசு பணத்திற்கு பதிலாக உப்பை பயன்படுத்தி வந்துள்ளது.

அந்த காலத்தில் ரோமானியப் பேரரசில் பணிபுரியும் வீரர்களுக்கு அவர்களின் பணிக்கு சம்பளமாக உப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக உப்பு சம்பந்தப்பட்ட உப்பு ரணம் போன்ற பழமொழிகள் அந்தக் காலத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது.

ரோமில், வீரர்களுக்கு உப்பு வடிவத்தில் ஊதியம் வழங்கப்பட்டதாக ரோமானிய வரலாற்று ஆசிரியர் பிளினி தி எல்டர் தனது ‘நேச்சுரல் ஹிஸ்டரி’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். Salary என்ற சொல் உப்பில் இருந்து உருவானது எனவும் அவர் கூறியுள்ளார்.

படையினரை குறிக்க பயன்படுத்தப்படும் soldier என்ற ஆங்கில என்ற வார்த்தை லத்தீன் சொல்லான ‘sal dare’ என்ற சொல்லில் இருந்து உருவானது.

உப்பை ஊதியமாக வழங்குவது ரோமானிய மொழியில் salarium என அழைக்கப்படுகிறது. இந்த சொல்லில் இருந்தே Salary என்ற சொல் உருவானது. கிமு 10, 000 முதல் கிமு 6, 000 வரை உப்பு சம்பளமாக வழங்கப்பட்டதாக பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர்.

பண்டைய இதனால் அன்றைய ரோமானியப் பேரரசில் இருந்த வீரர்களுக்கு சம்பளமாக கைநிறைய உப்பு வழங்கப்பட்டது. காலத்தில் உப்பு வியாபாரமும் நன்றாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது.