240 மில்லியன் ஆண்டு கால டிராகனின் புதைபடிவம் கண்டுபிடிப்பு: ட்ரயாசிக் காலத்தைச் சேர்ந்தது என அடையாளம்

0
105

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 240 மில்லியன் ஆண்டு கால 16 அடி நீளமுடைய டிராகனின் புதைபடிவத்தை கண்டுபிடித்துள்ளனர்.

நீளமான நீர்வாழ் ஊர்வனமான இது நீண்ட கழுத்தினை கொண்டு காணப்படுவதனால் இது டிராகன் இனம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது ட்ரயாசிக் காலத்தைச் சேர்ந்த நீண்ட நீர்வாழ் ஊர்வனவற்றிற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

டைனோசெபலோசொரஸ் ஓரியண்டலிஸ் இனம்

ஸ்கொட்லாந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள அந்த அதிசய இனம், டைனோசெபலோசொரஸ் ஓரியண்டலிஸ் (Dinocephalosaurus orientalis) என்று அழைக்கப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்பு ஒரு சர்வதேச குழுவால் செய்யப்பட்டது மற்றும் ஸ்காட்லாந்தின் தேசிய அருங்காட்சியகங்களில் இப்பொது காட்சிப்படுத்தப்படவுள்ளது.

விஞ்ஞானிகளின் கருத்து

இந்த சர்வதேச குழுவின் ஒரு பகுதியாக இருந்த டாக்டர் நிக் ஃப்ரேசர் பிபிசியிடம் பேசும்போது, இந்த புதைபடிவமானது “மிகவும் விசித்திரமான விலங்கிற்கு” சொந்தமானது என்று கூறினார்.

“இது ஃபிளிப்பர் போன்ற மூட்டுகளைக் கொண்டிருந்தது மற்றும் அதன் கழுத்து அதன் உடல் மற்றும் வால் இணைந்ததை விட நீளமானது,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த விலங்கு மத்திய ட்ரயாசிக் காலத்தைச் சேர்ந்த கடல் ஊர்வன டேனிஸ்ட்ரோபியஸ் ஹைட்ரைடுகளைப் போன்றது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

அதே போல இந்த உயிரினம் டைனோசெபலோசரஸ் கழுத்து மற்றும் உடற்பகுதியில் உள்ளது போல பல முதுகெலும்புகளை வைத்திருப்பதால் இது தனித்தன்மை வாய்ந்தது என்றும் கூறுகின்றனர்.

மேலும் அந்த உயிரினம் கடல்சார் வாழ்க்கை முறைக்கு தன்னை முழுமையாக மாற்றிக்கொண்ட ஒரு உயிரினம் என்று தெரிவித்துள்ளனர்.

புரட்டப்பட்ட மூட்டுகள் மற்றும் அதன் வயிற்றில் உள்ள எலும்புகள் மூலம் அவை புலப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். இக்குழுவில் ஸ்கொட்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் உள்ளனர்.

32 தனித்தனி முதுகெலும்புகள்

32 தனித்தனி முதுகெலும்புகளைக் கொண்ட அதன் கழுத்து, உயிரினங்களை சிறந்த வேட்டையாடுபவராகவும், உணவுக்காக நீருக்கடியில் உள்ள பிளவுகளைத் தேடுவதில் திறன் கொண்ட விலங்காகவும் இது மதிப்பிடப்படுகிறது.

புதைபடிவங்கள் முதன்முதலில் 2003 இல் கண்டுபிடிப்பு

டைனோசெபலோசரஸ் ஓரியண்டலிஸ் புதைபடிவங்கள் முதன்முதலில் 2003 இல் தெற்கு சீனாவில் உள்ள குய்சோ மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

எனினும் முழுமையற்ற எச்சங்கள் காரணமாக அதன் தோற்றம் நிச்சயமற்றதாக இருந்தது. இந்நிலையில் மற்ற முழுமையான மாதிரிகளை கண்டுபிடித்த பிறகு விஞ்ஞானிகள் இப்போது உயிரினத்தின் முழு சித்தரிப்பை வழங்க முடிந்தது.

கண்டுபிடிக்கப்பட்ட பல மாதிரிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் ஓரியண்டலிஸ் முன்பு மதிப்பிடப்பட்டதை விட கணிசமாக நீளமான கழுத்தை கொண்டிருப்பது வெளிப்படுத்தப்பட்டது. அதனால் விலங்கு அதன் நேர்த்தியான டிராகன் போன்ற தோற்றத்தை அளித்துள்ளது.

எவ்வாறெனினும், இந்த குறிப்பிடத்தக்க கடல் ஊர்வனம், சீனாவில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வரும் பிரமிக்க வைக்கும் புதைபடிவங்களுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.