ஜப்பானில் இதுவரை 13 பேர் உயிரிழப்பு!

0
164

ஜப்பானில் நேற்று (01) ஏற்பட்ட 7.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மத்திய ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இன்று காலை முதல் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டிருந்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தற்போதைக்கு தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலதிக சேதங்களைக் கணக்கிட அரசு குழுக்கள் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு விரைந்துள்ளன.