ஈழ போராட்ட இயக்கங்களுக்கு அள்ளி கொடுத்த மறைந்த நடிகர் விஜயகாந்த்!

0
157

1980 களில் தமிழகத்தில் உள்ள இராமேஸ்வரம் மண்டபத்தில் அனைத்து ஈழ போராட்ட இயக்கங்களும் பயிற்சிக்காக முகாமிட்டிருந்தபோது போராளிகளுக்கு உணவு நெருக்கடி ஏற்பட்டது. அருகில் இருந்த கடைக்காரனும் குறித்த முகாம் போராளிகளுக்கு தனது அளவுக்கு மீறி கடன் வழங்கியிருந்தார்.

நெருக்கடி அதிகரித்துக்கொண்டே சென்ற நிலையில் வேறு வழியின்றி போராளிகளில் ஒரு சிலர் அங்கிருந்த ஒரு வாகனத்தை எடுத்துக்கொண்டு நேரடியாக மதுரைக்கு சென்றுள்ளார்.

அங்கு நடிகர் விஜயகாந்த் அவர்களை சந்தித்து தங்களை அறிமுகப்படுத்திவிட்டு நிதி நெருக்கடி நிலைமைய எடுத்துக் கூற முற்பட்ட போராளிகளின் பேச்சை நிறுத்திய விஜயகாந்த் அப்போது தனது கைவசம் இருந்த ஒரு தொகை நிதியை அவர்களிடம் வழங்கினார்.

பின்னர் தான் இருக்கிறேன். கவலை வேண்டாம் எனவும் கூறி அனுப்பியதாக மூத்த இயக்க போராளி ஒருவர் கூறியுள்ளார். சத்தியம் திரையரங்கில் ஊமை விழிகள் திரைப்படத்தின் ஒரு நாள் வருமானத்தையும் இயக்கம் ஒன்றுக்கு வழங்கியிருந்தார்.

இப்படி ஏராளமான உதாரணங்களை கூற முடியும். எந்த இயக்கங்கள் என்றில்லாது எல்லா போராட்ட இயக்கங்களும் உதவியவர். அவரின் இழப்பு ஈழத்தமிழர்களுக்கும் பேரிழப்பு. சினிமாவில் நடிக்கனாகவும், நிஜத்தில் நடிக்காதவராகவும் வாழ்ந்த மனிதர் என கிளிநொச்சியை சேர்ந்த மு.தமிழ்ச்செல்வன் என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.