“மினி ரோபோக்கள்..” எந்த காயம் என்றாலும் உடலில் புகுந்து சரி செய்துவிடுமாம்.. மிரள வைத்த ஆய்வாளர்கள்

0
181

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் காயங்களைத் தானாகவே குணப்படுத்தும் ஒரு வேற லெவல் மினி ரோபோக்களை உருவாக்கியுள்ளனர். இது பலரையும் வியக்க வைப்பதாக இருக்கிறது.

மருத்துவத் துறையில் தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாகத் தானாகக் காயங்களைக் குணப்படுத்தும் மினி ரோபோக்கள் குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே மிகப் பெரிய திருப்புமுனையாக, ஆய்வாளர்கள் மனித செல்களை பயன்படுத்தி சிறிய உயிருள்ள ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்.

மினி ரோபோக்கள்: இந்த சிறு ரோபோக்கள் நகர முடியும். இதன் மூலம் சேதமடைந்த திசுக்கள் மற்றும் காயங்களைக் கூட விரைவில் குணப்படுத்தும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய ஒரு குழு இதை உருவாக்கியுள்ளனர். இதை அவர்கள் ஆந்த்ரோபோட்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஆந்த்ரோபோட்கள் மனித முடி சைஸில் இருக்கும். அவை தங்களை தாங்களே அசெம்பிள் செய்து கொள்ளும் திறனையும் கொண்டுள்ளது. காயங்களைக் குணப்படுத்தவும், நோய்க்கான சிகிச்சை அளிக்கவும் இந்த ஆந்த்ரோபோட்கள் பயன்படும். இது ஆய்வின் தொடக்கம் தான் என்றும் வரும் காலத்தில் இத்துறையில் பல மாற்றங்கள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஜீனோபோட்கள்: முன்னதாக இதே ஆய்வாளர்கள் ஜீனோபோட்கள் எனப்படும் முதல் உயிருள்ள ரோபோக்களை உருவாக்கியிருந்தனர். அவர்கள் ஆப்பிரிக்க நகம் கொண்ட தவளை கருக்களிலிருந்து பெறப்பட்ட ஸ்டெம் செல்களில் இருந்து ஜீனோபோட்கள் எனப்படும் முதல் உயிருள்ள ரோபோக்களை உருவாக்கினர். இது குறித்து ஆய்வு ஆசிரியர் மைக்கேல் லெவின், “சினோபோட்களின் கருவில் இருந்து வந்ததே அதில் முக்கிய காரணம் என நினைக்கிறார்கள். கருவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைக்கிறேன். தவளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அனைத்து உயிரினங்களிலும் அது இருக்கும். நமது சொந்த உடல் செல்களில் ஏகப்பட்ட திறன்கள் இருக்கிறது.

உயிருடன் இருக்கும் போது​​ஆந்த்ரோபோட்ஸ் என்பது முழு அளவிலான உயிரினங்கள் அல்ல, ஏனெனில் அதற்கு முழு வாழ்க்கைச் சுழற்சி இல்லை. அது மட்டுமின்றி.. இது ரோபோவா.. விலங்கா.. அல்லது இயந்திரமா என்பது குறித்து நாம் விவாதிக்கத் தேவையில்லை. அதன் பலன்கள் குறித்து நாம் ஆராய வேண்டும்” என்றார்.

ஆந்த்ரோபோட்கள்: இப்போது அதில் இருந்து அடுத்த அப்கிரேட் ஆக ஆய்வாளர்கள் இந்த ஆந்த்ரோபோட்கள் என்ற வகை மினி ரோபோக்களை உருவாக்கியுள்ளனர். இதற்காக வெவ்வேறு பாலினங்கள் மற்றும் வயதைச் சேர்ந்த நபர்களிடம் இருந்து மூச்சு குழாயிலிருந்து மனித உயிரணுக்களை ஆய்வாளர்கள் எடுத்துள்ளனர். கொரோனா மற்றும் நுரையீரல் நோய் தொடர்பான பணிகளின் காரணமாக இப்படி மூச்சு குழாயிலிருந்து செற்களைச் சேகரிப்பது ஆய்வாளர்களுக்கு எளிதாக இருக்கிறது. பலன்கள்: இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், “இந்த மினி ரோபோக்கள் நிச்சயம் நாம் வாழும் முறையை மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. இது ஏதோ ஓரிரு நாட்களில் நடப்பது இல்லை. பல ஆண்டுகள் ஆய்வின் முடிவு தான் இது. நாங்கள் உருவாக்கிய இந்த ஆந்த்ரோபோட்களை கொண்டு நிச்சயம் மனித உடல்களில் ஏற்படும் காயங்களுக்குக் கூட சிகிச்சை அளிக்க முடியும். இது உடனே ஆறு மாதத்தில் நடந்துவிடும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், நிச்சயம் இது சாத்தியமே” என்றார்.