மொபைலை போலவே ஸ்மார்ட் வாட்ச்களுக்கும் ஹேக்கிங் ஆபத்தா? அலர்ட் பதிவு

0
182

தற்போது பலரும் தங்கள் ஸ்மார்ட்போனுடன், ஸ்மார்ட் வாட்ச்களையும் அதிகம் பயன்படுத்த துவங்கி உள்ளனர். ப்ளூடூத் ஸ்மார்ட் வாட்ச்கள் பலரது அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமாகி விட்டன. நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்கள் உள்ளிட்ட டிஜிட்டல் டிவைஸ்கள் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பது என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.

ஆனால் ப்ளூடூத் ஸ்மார்ட் வாட்ச்சையும் ஹேக்கர்கள் ஹேக் செய்வார்களா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதுவரை நீங்கள் இதுபற்றி யோசித்தது இல்லை என்றால் இதற்கான பதில் ‘ஆம்’ என்பதே. ஸ்மார்ட்போனை போலவே ஸ்மார்ட் வாட்ச்களும் முற்றிலும் ஹேக் செய்யப்படலாம். மலிவு விலையில் கிடைக்க கூடியதாக இருந்தாலும் சரி அல்லது உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய காஸ்டலி தயாரிப்பாக இருந்தாலும் சரி ஹேக்கர்களின் குறியில் ஸ்மார்ட் வாட்ச்களும் இருக்கின்றன என்று கூறி அதிர்ச்சி அளிக்கிறார்கள் நிபுணர்கள்.

குறிப்பாக உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் வாட்ச்களின் வரவு தொடர்ந்து அதிகரித்து வருவது யூஸர்களின் தனிப்பட்ட டேட்டாக்களை திருட ஹேக்கர்களுக்கு பெரிய வாய்ப்பாக இருக்கிறது. எனவே ஸ்மார்ட் வாட்ச்களை பயன்படுத்தும் யூஸர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லை என்றால் யூஸரின் பேங்க் அக்கவுண்ட் விவரங்கள் உட்பட அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட கூடிய அபாயம் ஏற்படலாம்.

ப்ளூடூத் லோ எனர்ஜி (BLE) என்பது ப்ளூடூத் ஸ்மார்ட் வாட்ச்களில் காணப்படும் ஒரு ஸ்பெஷல் டெக்னலாஜியாகும். வழக்கமான ப்ளூடூத் டெக்னலாஜிக்கு மாறாக, BLE டெக்னலாஜி குறைந்த பவரை பயன்படுத்துவதோடு அதிக ஆற்றல் திறன் கொண்டதாகவும் இருக்கிறது. இந்த டெக்னலாஜி பல்வேறு சிறிய சேனல்கள் மூலம் டேட்டா ட்ரான்ஸ்மிஷனை எளிதாக்குகிறது.

BLE டெக்னலாஜி கொண்ட டிவைஸ்கள் உதாரணத்திற்கு ஸ்மார்ட் வாட்ச்கள் beacons எனப்படும் அட்வெர்டைஸிங் பாகெட்ஸ்களை கொண்டுள்ளன. இந்த beacons உங்கள் ஸ்மார்ட்வாட்ச் இருப்பதைப் பற்றி ரேஞ்சில் உள்ள டிவைஸ்களுக்கு தெரிவிக்கின்றன. இதன் பின் ஸ்கேன் ரெக்வஸ்ட் மூலம் ஸ்மார்ட் போன் போன்ற சாதனம் இந்த அட்வெர்டைஸிங் பாகெட்ஸ்களுக்கு பதிலளிக்கிறது. இதற்குப் பிறகு, ஸ்மார்ட்வாட்ச் கூடுதல் டேட்டாக்களுடன் ஸ்கேன் ரெக்வஸ்ட்டிற்கு பதிலளிக்கிறது

ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட்போன் இடையே உள்ள ஸ்ட்ரக்ச்சர்ட் டேட்டா GATT என வரையறுக்கப்படுகிறது. இந்த GATT-ஆனது டிவைஸின் அம்சங்கள், பண்புகள் மற்றும் சேவைகளின் பட்டியலைக் கொண்டு BLE டிவைஸ்களுக்கு இடையில் டேட்டா ட்ரான்ஸ்ஃரிங்கிற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை ஹேக்கர்களால் அட்வெர்டைஸிங் டிவைஸ்களின் beacons-களை இடைமறிக்க முடிந்தால், அவர்கள் GATT மூலம் கிடைக்கும் தகவலை எடுத்து கொள்ள கூடும். எனவே உங்கள் ஸ்மார்ட் வாட்ச்சில் பாதுகாப்பற்ற ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்வது, உங்கள் டேட்டாவிற்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்த கூடும். உங்கள் ஸ்மார்ட் வாட்ச்சில் ஏதேனும் ஆப்ஸை இன்ஸ்டால் செய்யும் முன் அதன் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொள்வது அவசியம்.

ஸ்மார்ட் வாட்ச் மூலம் டேட்டா ஹேக் செய்யப்படுவதை தடுக்க செய்ய வேண்டியவை:

  • ஸ்மார்ட் வாட்ச் வாங்கும் போது வலுவான பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய தயாரிப்புகளை வாங்க முன்னுரிமை கொடுங்கள்.
  • உங்கள் ஸ்மார்ட் வாட்சில் ஏதேனும் ஆப்ஸை டவுன்லோடு செய்யும் முன் மிக எச்சரிக்கையாக இருங்கள். அவை நம்பகமான ஆப் தானா என்பதை உறுதிப்படுத்தி கொண்டு பிறகு இன்ஸ்டால் செய்யுங்கள்.
  • யூஸர்களின் டேட்டா பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுப்பதற்காக அறியப்பட்ட புகழ்பெற்ற நம்பகமான பிராண்டுகளின் ஸ்மார்ட் வாட்ச்களை தேர்வு செய்து வாங்குங்கள்.
  • உங்களது ஸ்மார்ட் வாட்ச் டிவைஸிற்கு ஏதேனும் புதிய அப்டேட்ஸ்கள் வந்திருக்கிறதா என்பதை அவ்வப்போது சரிபார்த்து அப்டேட் செய்து கொள்ளுங்கள்.