உங்களது கூகுள் அக்கவுண்ட்டை முழுவதுமாக முடக்க கூகுளுக்கு அதிகாரம் இருக்கிறதா? எப்போது இது நடக்கும்.!!

0
170

நம்மோடு சேர்த்து கோடிக்கணக்கான நெட்டிசன்கள் மற்றும் டிஜிட்டல் டிவைஸ் யூஸர்கள் என அனைவரும் கூகுள் சர்விஸ்களை பெரிதும் சார்ந்து இருக்கிறோம். ஸ்மார்ட் ஃபோன்கள் உள்ளிட்ட டிஜிட்டல் டிவைஸ்களில் கூகுள் அக்கவுண்ட்ஸ்களின் பயன்பாடு நாம் அறிந்ததே. நிச்சயமாக நீங்களும் கூகுள் அக்கவுண்ட்டை பயன்படுத்துபவராக தான் இருப்பீர்கள். ஆனால் கூகுள் திடீரென உங்கள் கூகுள் அக்கவுண்ட்டை தடை செய்து விட்டால் என்ன நடக்கும், என்ன செய்வீர்கள் என்று நீங்கள் சிந்தித்தது உண்டா..?

ஆம், உங்கள் கூகுள் அக்கவுண்ட்டை சஸ்பென்ட் செய்ய அல்லது டெர்மினேட் செயற் கூகுள் நிறுவனத்திற்கு அனைத்து உரிமைகளும் உள்ளன .அப்படி செய்யப்பட்டால் உங்களால் Gmail, Google Drive, Photos, Google Pay மற்றும் பல அம்சங்களுக்கான அக்சஸ் உங்களுக்கு கிடைக்காமல் போகும். இதனால் நீங்கள் உங்களது முக்கிய டேட்டா மற்றும் ஃபோட்டோ & வீடியோக்களை அணுக முடியாமல் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடலாம்.

சுருக்கமாக சொன்னால் கூகுள் உங்களது அக்கவுண்ட்டை தடை செய்தால் அது உங்களது டிஜிட்டல் பயன்படு சார்ந்த வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடும். மேலும் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒருவர் வேடிக்கைக்காக அல்லது தொழில்நுட்பத்துடன் விளையாடும் நோக்கத்தில் செய்யும் முட்டாள்தனமான காரியத்திற்காக கூட ஒருவரது கூகுள் அக்கவுண்ட் முடக்கப்படலாம்.

கூகுளின் சேவை விதிமுறைகள் (Terms of Service):

கூகுள் நிறுவனத்தின் Terms of Service-ல் நிறுவனத்தின் விதிமுறைகள் அல்லது கொள்கைகளுக்கு இணங்காத அக்கவுண்ட்ஸ்களை சஸ்பென்ட் செய்ய அல்லது டெர்மினேட் செய்வதற்கான உரிமையை நிறுவனம் கொண்டுள்ளதாக வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சேவைகளை தவறாக பயன்படுத்துதல் அல்லது குறுக்கீடு செய்தல் இவற்றின் அடிப்படையில் ஒரு அக்கவுண்ட் மீது நடவடிக்கை எடுக்க கூகுளுக்கு அதிகாரம் இருக்கிறது.

கூகுள் பல அக்கவுண்ட்ஸ்களை தடை செய்துள்ள நிலையில் Android Authority இதுபோன்ற ஒரு சம்பவத்தை குறிப்பிட்டுள்ளது. ஒரு வீடியோவை “ஸ்பேமிங்” செய்ததற்காக சில யூடியூப் யூஸர்கள் தங்கள் கூகுள் அக்கவுண்ட்ஸ் மீது தடையை சந்தித்து உள்ளனர்.உண்மையில் இது வேடிக்கையாக செய்யப்பட்டது மற்றும் குறிப்பிட்ட வீடியோ கிரியேட்டரும் கூட இதை செய்ய விரும்பினார், ஆனால் இறுதியாக கூகுள் YouTube-ஐ மட்டுமல்ல கூகுள் அக்கவுண்ட்ஸை தடை செய்து விட்டது.

உங்கள் கூகுள் அக்கவுண்ட் ஏன் டெர்மினேட் செய்யப்படலாம்.?

ஏற்கனவே கூறியபடி நிறுவனத்தின் சேவை விதிமுறைகள் என்பது அவர்களின் கொள்கைகளுக்கு இணங்காததற்காக அல்லது சந்தேகத்திற்குரிய தவறான நடத்தைக்காக யூஸர்களின் அக்கவுண்ட்ஸ்களை சஸ்பென்ட் செய்யவோ அல்லது டெர்மினேட் செய்யவோ கூகுளுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும் நிறுவனத்தின் பார்வையில் எது துஷ்பிரயோகம் என்பதற்கான முடிவுகளை எடுக்கவும் கூகுளுக்கு அதிகாரம் உள்ளது.

அபாயங்களும் விளைவுகளும்…

கூகுள் ஒருவரின் அக்கவுண்ட்டை தடை செய்வதால் அதன் பல சேவைகளுக்கான அணுகலை இழப்பதை தவிர, வேறு பிற விளைவுகளையும் ஏற்படுத்தலாம். இந்த தடையானது ஒருவரின் ஸ்மார்ட்ஃபோன் செயல்பாட்டை சீர்குலைத்து ஆப்ஸ் டவுன்லோட்ஸ் மற்றும் நோட்டிஃபிகேஷன்களை பாதிக்கலாம்.

கூகுள் அக்கவுண்ட் மீது தடையை எதிர்கொள்ளும் ஒருவர் அதை மீட்டெடுக்க உதவும் வழிகள் கீழே…

  • தடைக்கான காரணத்தை கண்டறிய உங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் லாகின் செய்யவும்
  • பின் Start Appeal என்பதை கிளிக் செய்து ஸ்கிரினில் காட்டப்படும் வழிமுறைகளை பின்பற்றவும். EU-ன் டிஜிட்டல் சேவைகள் சட்டம் அல்லது சட்ட நடவடிக்கையின் கீழ் தகராறு தீர்வு உள்ளிட்ட கூடுதல் ஆப்ஷன்கள் EU குடியிருப்பாளர்களுக்கு உள்ளன.
  • நீங்கள் Appeal செய்ததற்கு நிறுவனத்தின் பதிலுக்காக காத்திருக்கும் போது Google Photos மற்றும் Drive போன்ற ஆப்ஸிலிருந்து உங்களது முக்கிய டேட்டாக்களை டவுன்லோட் செய்ய முயற்சிக்கவும். எனினும் கூகுள் ஒரு அக்கவுண்ட் மீது விதித்திருக்கும் தடையின் தன்மையின் அடிப்படையில் சில கன்டென்ட்ஸ்களை யூஸர்களால் டவுன்லோட் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • குறிப்பிட்ட கொள்கை மீறல்களுக்கு 2 முறை வரை முறையிட கூகுள் அனுமதிக்க கூடும். எனவே உங்களது அப்பீலை சப்மிட் செய்யும் முன், எத்தனை அப்பீல்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கூகுள் டேட்டாவை எவ்வாறு பாதுகாப்பது.?

வெவ்வேறு கூகுள் அக்கவுண்ட்ஸ்களை உருவாக்கவும்… ஸ்மார்ட் ஹோம் டிவைஸஸ், மீடியா ஃபைல்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் தொடர்பான செயல்பாடுகளுக்கு தனித்தனி கூகுள் அக்கவுண்ட்ஸ்களை வைத்திருப்பது கூடுதல் பாதுகாப்பை சேர்க்கிறது. இதில் ஏதேனும் ஒரு அக்கவுண்ட் தடையை எதிர்கொண்டால் கூட பாதிப்பு குறைவாக இருக்கும்.

  • முக்கிய டேட்டாக்களை பேக்கப் எடுத்து கொள்ளுங்கள்: ஒரு ஹார்ட் டிஸ்கில் உங்களது ஃபோட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் டாகுமெண்ட்ஸ்களை தொடர்ந்து பேக்கப் எடுத்து வைத்து கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்கவும்.
  • உங்களது அனைத்து முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டால்… உங்களது அனைத்து மேல்முறையீடுகளும் கூகுளால் நிராகரிக்கப்பட்டால், கூகுளின் முடிவுக்கு எதிராக சோஷியல் மீடியா யூஸர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கலாம்.