விவாகரத்தை கோலாகலமாக கொண்டாடிய சீனப் பெண்: நண்பர்களுக்கும் மிகப் பெரிய விருந்து

0
146

சீனாவில் கணவனை விவாகரத்து செய்த பெண்ணொருவர் தேவையற்ற உறவை தொடராமல் விவாகரத்து செய்துவிட்டு விரும்பிய வாழ்க்கையை அனுபவிப்போம் எனக்கூறி தனது நண்பர்கள், நண்பிகளுக்கு மிகப்பெரிய விருந்தை ஏற்பாடு செய்து கொண்டாடியுள்ளார்.

மனித வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வு. இதன் காரணமாக மனிதர்களின் வாழ்க்கையில் திருமணத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

இதன் காரணமாகவே அதிகளவில் பணத்தை செலவு செய்து பிரமாண்டமாக திருமண வைபவங்கள் நடத்தப்படுகின்றன. சிலர் தமது திருமண நாளை விருந்துகள் மற்றும் கேளிக்கைகளுடன் கோலாகலமாக கொண்டாடுவதுண்டு.

இப்படியான நிலைமையில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த சோங் என்ற பெண் தனது நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு விடைக்கொடுத்து விட்டு அதனை மறக்க முடியாத கொண்டாட்டமாக கொண்டாட நினைத்து நெருங்கிய தோழிகளுக்கு மிகப்பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதனை என்றும் மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற புகைப்படக் கலைஞர்களும் அழைக்கப்பட்டு புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள சோங், தனது முட்டாள்தனமான திருமணம் முடிந்துவிட்டதாகவும் மீண்டும் ஒற்றை வாழ்க்கையை அனுபவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறியுள்ளார்.

தனது முன்னாள் கணவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவரது செல்போனுக்கு வந்த செய்திகளைப் பார்க்க சகிக்கவில்லை எனவும் சோங் தனது நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் விவாகரத்துக்கு பின்னர் இப்படியான சந்தோஷமாக வாழ்க்கை இருக்கும் என முன்னரே தெரிந்திருந்தால் நீண்டகாலத்திற்கு முன்பே விவாகரத்து செய்திருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.