பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் விடுதலை!

0
121

பாகிஸ்தானின் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை அல்-அஜீஸியா ஊழல் வழக்கிலிருந்து இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை விடுவித்துள்ளது.

ஏற்கெனவே, அவா் மீது தொடரப்பட்டிருந்த அவென்ஃபீல்ட் ஊழல் வழக்கிலிருந்தும் நவாஸை அந்த நீதிமன்றம் கடந்த மாதம் விடுவித்தது.

பனாமா ஆவண முறைகேடு விவகாரத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதமா் பதவியிலிருந்து அகற்றப்பட்ட நவாஸுக்கு அல்-அஜீஸியா உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த 2018-இல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது.

பின்னா் சிகிச்சைக்காக 2019-இல் லண்டன் சென்ற நவாஸ் அங்கேயே தங்கிவிட்டாா். அவரை தப்பியோடிய குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.

இந்த நிலையில் கடந்த அக்டோபரில் பாகிஸ்தான் திரும்பிய நவாஸ் சிறைத் தண்டனைக்குக் காரணமாக இரு ஊழல் வழக்குகளில் இருந்தும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளாா்.